Saturday, September 25, 2010

மஸ்ஜித் நபவியின் வெளி பகுதியில் காணப்படும் அழகிய குடைகள்

Bookmark and Share


மஸ்ஜித் நபவியின் வெளி பகுதியில் காணப்படும் மின் விளக்குகள் அமைந்துள்ள தூண்களில் நிழல் தருவதற்காக அமைக்க பட்டிருக்கும் விசாலமான குடைகள் இவை, இந்த குடைகள் விரிகின்ற போதும் சுருங்குகின்ற போதும் மிக அழகாக காட்சிதரும்,  காலையில் மலர்ந்து   மீண்டும் மாலையில் சுருங்கி அந்த தூணில் ஒரு பகுதியை போன்று காட்சி தரும் ஒரு வகை இலத்திரனியல் குடைகள் ..




இந்த குடைகள் விரிவதற்கு முன்னர் தூண்களை போன்றே காட்சி தரும் 



குடைகள் விரிந்த பின் இவ்வாறு தோற்றமளிக்கும் 
















Friday, August 27, 2010

Watch live program from Holy Makkah and Madeena on your desktop.

Bookmark and Share

Watch live program from Holy Makkah and Madeena on your desktop.

Please do the following steps: 

(first of all check your internet connection )

1. Come to the Desktop First

2. Right Click -> New -> Shortcut



3. New Window Will Appear

4. Type   mms://38.96.148.74/Quran2




or



5. Then Click Next

6. Type Any name as “Makkah”



7. Then Finish

8. Open The Short Cut 



Now it’s playing Makkah Live Program. Just wait for a while for buffering.



Do the Same Procedure for Madeena Live Program Using the url  mms://38.96.148.74/Sunna2

***             ****            ***** 

Actually I received these written steps on how to create a short cut on Desktop, by an email message,and  we can watch live program of Holy Makkah and Madeeha by using same url  without making any shortcuts, 
one of my friend shared with us below screen shots, when I had forwarded these steps to my friends……….  



you can try this method alos to watch the live program of Holy Makkah and Madeena instantly


1. Click on Start button and type run in the search box then press enter key
    or Press Windows key + R 

2. Type  mms://38.96.148.74/Quran2 (or cut and past this url )
  

3. Click OK or press Enter key




or



Do the Same Procedure for Madeena Live Program Using the url  mms://38.96.148.74/Sunna2

Dear all kindly share this message among all Muslim Brothers and Sisters 

Tuesday, August 17, 2010

அல்குரானை இலகுவான முறையில் ஓத கற்று கொள்ளவும் அல்குரான் வசனங்களின் மொழிபெயர்ப்பினை அறிந்து கொள்ளவும் வழிகாட்டும் ஒரு இணையத்தளம்

Bookmark and Share
இலகுவான முறையில் அல்குரானை ஓத கற்று கொள்ளவும் அல்குரான் வசனங்களின்  மொழிபெயர்ப்பினை அறிந்து கொள்ளவும் வழிகாட்டுகிறது Tanzil Info எனும் இந்த  இணையத்தளம்  http://tanzil.info/  

அல்குரானை அழகிய ராகதுடனோ அல்லது எழுத்துக்களை கோர்த்து சரளமாகவும் திருத்தமாகவும் ஓதுவதற்கு பயற்சி பெற விரும்புவோருக்கு இத்தளம் மிக உபயோகமாக இருக்கும். 



இனி இத்தளத்தினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம் இத்தளத்தினை பயன்படுதுவதற்கு   சில முக்கியமான்  Option களும் தரப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றாக அது பற்றி நோக்குவோம்.



01. Serch Box
இதனுள்  ஒரு குறித்த சொல்லை வழங்கி அந்த சொல் எந்தெந்த வசனங்களில் வந்திருக்கின்றது என்பதனை அறிந்து கொள்ளலாம். சில நேரம் குறித்த ஒரு வசனத்தின் ஒரு சொல் நினைவில் இருந்தால் அந்த சொல்லை வைத்து அது எந்த வசனத்தில் எந்தெந்த சூராக்களில் வந்திருக்கின்றது என்பதனை அறிந்து கொள்ளலாம். அல்லது சம்மந்தப்பட்ட வினையடியினை ( root مصدر) கொடுத்தும் தேடி கொள்ளலாம், குறிந்த அந்த சொல் எத்னை தடவைகள் எத்தனை வசனங்களில் வந்திருக்கின்றது என்பதனையும் அறிந்து கொள்ளலாம். அல்குரான் வசனங்களை மேற்கோள் காட்டி மார்க்க சொற்பொளிவுகளை நிகழ்த்துபவர்களுக்கும், ஆய்வு கட்டுரைகளை எழுதுபவர்களும் குறித்த ஒரு விடயம் சம்மந்தமாக அல்குரான் வசனங்களை தொகுத்து ஆய்வு செய்வது இலகு படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக நோன்பு பற்றிய அல்குரான் வசனங்களை அறிந்து கொள்ள الصيام என்று தட்டச்சு செய்வதன் மூலமோ அல்லது root என்பதனை கிளிக் செய்து தரப்பட்டுள்ள சொற்களில் صوم என்பதனை தேர்வுசெய்து தேடுவதன் மூலமோ அது பற்றிய அனைத்து அல்குரான் வசனங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.




02. Browse
இக் கட்டத்திற்குள் Sura என தரப்பட்டிருக்கும் இடத்தில் விருப்பமான அல்குரான் சூரா வினை தெரிவு செய்து கொள்ளலாம். இரண்டாவதாக காணப்படும் Aya எனும் இடத்தில் உங்களுக்கு தேவையான வசனத்தை தெரிவு செய்யலாம். அல்லது தரப்பட்டிருக்கும் முதலாவது வசனத்தில் இருந்தே ஓதுவதற்கு ஆரம்பிக்கலாம். இவை இரண்டும் தெரிவு செயப்பட்டதும். அந்த வசனம் அல்குரானின் எத்தனையாவது ஜுஸ்உ (பகுதி) என்பதும் அல்குரானில் எத்தனையாவது பக்கம் என்பதும் காட்டப்படும்.


                 
03. Recitation
இந்த கட்டத்திற்குள் அழகிய முறையில் ஓதக்கூடிய காரிகளின் (அல்குரானை இனிமையாக ஓத கூடியவர்கள்) கிறாத் (அல்குரான் ) களை ஒலி வடிவில் கேட்கலாம் இந்த பகுதியில் நம்மக்கு விருப்பமான காரிகளின் கிறாத்களை தரப்பட்டிருக்கும். drop down menu வில் இருந்து தெரிவு செய்யலாம், இமாம் அப்துல் றஹ்மான் சுதைசி, இமாம் ஷுரைம், ஷேய்க் அஹ்மத் அல் அஜமி , ஷேய்க் முஹம்மது அயூப் உட்பட பிரபலமான காரிகளின் கிறாத்களினை தெரிவு செய்து கேட்கலாம். ஷேய்க் மிஷாரி அல் பாஸியின் குரல் வழி ஓதப்பட்ட ஒலிக்கோப்புகள் Default ஆகா தரப்பட்டிருக்கின்றன. இதன் கீழே காணப்படும் Play Button இனை  அழுத்துவதன் மூலம் நாம் கண்களினால் அல்குரானிய வசனங்களை Screen இலே பார்த்து கொண்டிருந்தவாறே   ஷேய்க் மிஷாரி அல் பாஸியின் குரல்வழி உச்சரிப்பினையும் ராகத்தினையும் கேட்கலாம். எந்த வசனம் ஒலித்து கொண்டிருக்கின்றதோ அந்த வசனம் நிழட்படுத்தபட்டு காண்பிக்கப்படும். குறித்த வசனத்தினை மீண்டும் ஒரு தடவை கேட்க   வேண்டுமாயின் அவ்வசனத்தின் மீது ஒரு தடவை கிளிக் செய்யுங்கள்,


                        
அல்குரானை அழகிய ராகதுடனோ அல்லது எழுத்துக்களை கோர்த்து சரளமாகவும் திருத்தமாகவும் ஓதுவதற்கு முடியாதவர்கள் தனிமையில் Headset இனை   காதுகளில் அணிந்து கொண்டு Screen ஐ பார்த்தபடி ஓதிக்கொண்டே செல்லலாம் உங்களுக்கு அருகில் இருந்தே இமாம் மிஷாரி அல் பாஸி ஓதி தருவது போன்று இருக்கும் இப்பயிற்சியினை தொடர்தேர்ச்சியாக கடைப்பிடித்தால் காலப்போக்கில் சுயமாக அல்குரானை அதற்கேயுரிய உச்சரிப்புடனும் ராகத்துடனும் இனிமையாக ஓதக்கூடிய ஆற்றல் தானாக வளர்ந்துவிடும்.

04. Translation
இந்த கட்டத்தில் உலகின் பல்வேறு முக்கியமான மொழிகள் நிரற்படுத்த பட்டிருக்கும். இதில் நமது தாய் மொழியான தமிழினை அல்லது சர்வதேச மொழியான ஆங்கிலத்தினை தெரிவு செய்து கொள்ளலாம். இந்த கட்டத்தில் மூன்று வகையான தெரிவுகள் தர பட்டிருக்கும். அல்குரான் வசனங்களுக்கான மொழிபெயர்ப்பினையும் வாசித்து கொள்ள முடியுமாக இருப்பது இத்தளத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாகும். இந்த கட்டத்தில் மூன்று வகையான தெரிவுகள் தர பட்டிருக்கும்.
           

                        
Fixed translation box என்ற கட்டளையின் முன்னால் உள்ள சிறய வட்டத்திற்குள் கிளிக் செய்தவுடன் இப்பொழுது நீங்கள் ஓதிக்கொண்டிருக்கின்ற குறித்த வசனத்தின் மொழி பெயர்ப்பு அந்த வசனத்தை தொடர்ந்தவாறே தனியாக ஒரு கட்டத்தினுள் காட்டப்படும். கீழே தரப்பட்டிருக்கும் Screen shot இனை பார்க்கவும்.



அல்லது நீங்கள் Translate on mouse over எனும் தெரிவின் முன்னால் கிளிக் செய்வதன் மூலமாக உங்கள் mouse இன் அசைவிற்கு ஏற்ப தேவையான இடங்களில் மட்டும் மொழிபெயர்ப்பினை அறிந்து கொள்ளலாம். நீங்கள் எந்த வசனத்தின் மொழிபெயர்ப்பை வாசிக்க விரும்புகிறீர்களோ அந்த வசனத்தின் மீது  mouse இனை கொண்டு செல்லவும் உடனே மொழிபெயர்ப்பு காட்டப்படும்.



அல்லது நீங்கள் அல்குரான் ஓதப்படும் ஒலியினை கேட்டவாறே மொழிபெயர்ப்பினை மாத்திரம் படிப்பதற்கு விரும்பினால் இத்தளத்தின் மேற்பகுதியில் காணப்படும் Translation எனும் தெரிவினை கிளிக் செய்யவும். 



05 Quran
அடுத்து Quran என தலைப்பிடப்பட்டிருக்கும், கட்டத்திற்கு செல்லுங்கள் இங்கு எதுவும் செய்ய தேவையில்லை நீங்கள் அல்குரானின் ஏனைய எழுத்ணி முறைகளை அறிய விரும்பினால் மட்டும் கிளிக் செய்து பார்க்கலாம். ஆனால் தரப்பட்டிருக்கும் இந்த பொதுவான  எழுத்தணி முறை  இலகுவானதாகும்.


06.Disply Option
Disply Option எனும் கட்டத்தில் நீங்கள் உங்களுக்கு பிடித்தமான எழுத்துருக்களை (fonts) மாற்றிக்கொள்ளலாம். அல்லது அல்குரான் வசன எழுத்துக்கள் கொஞ்சம் பெரிதாக இருந்தால் தாமதமில்லாமல்  சரளமாக ஓதமுடியுமே என எண்ணுபவர்கள் உங்களின்  விருப்பதிற்கு    ஏற்ப எழுத்துக்களின் அளவினை பெருப்பித்து கொள்ளலாம்.



****    ****    ****


இந்த  Tanzil Project  2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இணைய வழியாக அல்குரான் வசனங்களை தேடுபவர்களுக்கோ அல்லது அல்குரான் சம்பந்தப்பட்ட இணையதளங்களை நிருவகிப்பவர்களுக்கோ மிக சரியான எழுதுக்களுடன் அல்குரான் வசனங்களை  தருவதை நோக்கமாக கொண்டே இஸ்லாமிய சகோதரர்  Hamid Zarrabi-Zadeh என்பவரால் உருவாக்கப்பட்டது.


2008 ஆம் ஆண்டுக்கு முன் அல்குரான் வசனம் ஒன்றினை  Internet  Search engine   வாயிலாக தேடியபோது  சில பொழுதுகளில் எழுத்து பிழைகளுடன் கூடிய வசனங்களும் இணையத்தில் காணப்பட்டமையே இத்திட்டத்தை முன்னெடுக்க காரணமாக இருந்ததென இவர் விவரிக்கின்றார்.  இது பற்றிய  மேலதிக தகவல்களை பெற இவ்விணைப்பினை கிளிக் செய்து வாசிக்கவும்
http://tanzil.info/wiki/Tanzil_Project

Sunday, August 8, 2010

முகம்மது நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை சரிதையை ஒலி வடிவில் (Mp3) தரவிறக்கம் செய்யலாம்

Bookmark and Share


முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை விளக்குகின்ற புத்தகங்கள் ஏராளமாக இருக்கின்றன ஆரம்ப கால இமாம்களால் எழுதப்பட்ட முதன்மையான புத்தகங்கள் பின்னர் அவ்வாறான பல முதன்மையான நூல்களை உசா துணையாக கொண்டு எழுதப்பட்ட நவீன கால இஸ்லாமிய சிந்தனையாளர்களின் புத்தகங்கள் என வகைப்படுத்தலாம்,

இவாறு சீறா பற்றிய அல்-குரான் அல்-ஹதீஸ் களின் நிலைக்களநிலிருந்தும் ஏனைய மூலநூல்களின் தரவுகளின் வாயிலாகவும் எழுதப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட புத்தகம் அல்-றஹீக் அல்- மக்தூம் ( The Seald Nectar) ஆகும் .தற்காலத்தில் வெளியான சீறா பற்றிய நூல்களில் காத்திரமானதும் எளிமையான வடிவில் இறைதூதரின் வாழ்வினை விவரிக்கின்ற புத்தகம் என பெயர் பெற்றது அல்-றஹீக் அல்-மக்தூம். 1976 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி இடம்பெற்ற மகா நாடொன்றில் சவூதி அரேபியா, மக்காவை மையமாக வைத்து இயங்கும் “ராபிததுல் ஆலமில் இஸ்லாமி” (Muslim World League) எனும் அமைப்பின் ஆய்வுக்கட்டுரை போட்டி ஒன்றிற்காக இவர் எழுதி உலகளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற ஆய்வே இந்த நூலாகும் இது பற்றிய மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள இந்த நூலின் பதிப்புரையினை இந்த இணைப்பினை கிளிக் செய்து வாசிக்கவும் http://www.islamkalvi.com/portal/?p=613


இந்த புத்தகத்தின் Mp3 ஒலி வடிவினை இஸ்லாம் கல்வி .கொம் தளத்தில் இருந்து தரவிறக்கி கொள்ளலாம். மிக இலகுவான தமிழ் நடையில் வார்த்தைகள் கோர்க்கப்பட்டிருக்கின்றன , ஒரு சிறு குழந்தைக்கு கதை சொல்வது போன்ற லாவகமான மொழி நடையில் இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வாழ்கை சரிதை விவரிக்கப்படுகின்றது. நபியவர்கள் கலந்து கொண்ட யுத்தங்கள் பற்றிய வர்ணனைகளும் விவரிப்புகளும் நம் மனக்கண் முன் காட்சிகளாக விரிகின்றன.


இந்த Mp3 ஒலிப்பேழைகளை (CD) தரவிறக்கி வீட்டில் அனைவருக்கும் கேட்கும் படி ஒலிக்க விடலாம், அல்லது தனிமையில் மன ஓர்மையுடன் ஹெட்செட் மூலமாக் கேட்பது இலகுவில் மனதில் பதிந்து கொள்வதற்கு வழிவகுக்கும். வேண்டுமானால் தூங்குவதற்கு முன் கேட்டுப்பாருங்கள் பெருமானாரின் வரலாற்றையே ஒருவர் நம்மக்கு கதையாக சொல்வது போன்று இருக்கும், இரண்டு மூன்று தடவைகள் செவிமடுக்கும் போது இயல்பாகவே சீறா பற்றிய ஓரளவு தெளிவினை பெற்றுக்கொள்ளலாம். புத்தகம் ஒன்றினை வாசித்து கிடைக்கும் தரவுகளின் மூலமாக பெருமானாரின் வாழ்க்கை சரிதையை நினைவில் நிறுத்துவதை இலகு படுத்தி இருக்கின்றன இந்த ஒலிப்பேழைகள்.


சிலவேளைகளின் முதல் ஓரிரு பாகங்களில் விவரிக்கபட்டிருக்கும் நபியவர்களின் குலம், கோத்திரம் மற்றும் இஸ்லாத்திற்கு முன்னரான அரேபியர்களது வாழ்வுமுறை அதிகமான தரவுகளை முன்வைப்பதால் சற்று சுவாரசியம் குறைவாக இருக்கலாம், ஆனாலும் அதன் பின்னர் வருகின்ற அனைத்து பாகங்களும் அடுத்து என்ன நடைபெறும் எனும் வகையில் நம் ஆவலை தூண்டி கொண்டே இருக்கும். குறிப்பாக நபியவர்களது வாழ்வில் இடம்பெற்ற மிஹ்ராஜ் இரவு ஹிஜ்ரத் பற்றிய விவரிப்புகள், தவிரவும் நபியவர்கள் கலந்து கொண்ட யுத்தங்கள், உடன்படிக்கைகள், என்பன சுவாரசியமானதும் விறுவிறுப்பானதுமான நடையில் கூறப்பட்டிருக்கின்றன , புத்தகத்தில் குறிப்பிட்ட படி இவை அத்தனையும் அந்த யுத்தங்களில் நேரடியாக கலந்து கொண்ட சஹாபாக்களின் வர்ணனைகளுடன் சற்றேனும் சுவாரசியம் குன்றாமல் இந்த ஒலிப்பேழை வாயிலாக கேட்கலாம்.

Graves of Martyrs in Badr



இதிலும் குறிப்பாக இந்த கதை சொல்லியின் குரல் சம்பவங்களுக்கு ஏற்ப உயர்ந்தும் தாழ்ந்தும் ஒரு வகை ராகத்துடன் இருப்பது செவிமடுப்பவர்களின் கவனத்தை சிதற விடாமல் செய்கின்றது.


அதிகரித்த வேலைப்பளுக்களுக்கு மத்தியில் புத்தகங்களை வாசித்து நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய முடியாதவர்கள் கிடைக்கின்ற ஓய்வு நேரத்தில் இந்த அல்-றஹீக் அல்- மக்தூம் புத்தகத்தின் ஒலி வடிவினை கேட்பதன் மூலமாக பெருமானாரின் வாழ்க்கை சரிதையை அறிந்து கொள்ளலாம் குறிப்பக சிறுவர்களுக்கு இதனை அறிமுகப்படுத்தலாம் கதைகளின் வாயிலாக சலிப்பேதுமின்றி சீறா பற்றிய அறிவினை அவர்களால் பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும்.


இதனை முழுமையாக தரவிறக்கி கொள்ள இந்த இணைப்பினை கிளிக் செய்யவும் மொத்தமாக மூன்று CD கள் நிரற்படுத்த பட்டிருக்கும். ஒவ்வொன்றாக தரவிறக்கி கொள்ளுங்கள். 

http://www.islamkalvi.com/download_cd/al_raheeq/browse/


அல்லது குறிப்பிட்ட பாகத்தினை ஒன்லைன் வழியாக கேட்பதற்கு விரும்பினால் இந்த இணைப்பினை கிளிக் செய்து கேட்கலாம் விரும்பினால் பக்கத்திலிருக்கும் தரவிறக்க இணைப்பினை கிளிக் செய்து குறித்த Mp3 கோப்பினை தரவிறக்கலாம். மொத்தமாக 45 பாகங்கள் நிரற்படுத்த பட்டிருக்கின்றன. http://www.islamkalvi.com/history/raheeq_audio/index.htm



எதோ முடிந்தளவு குறுகிய நேரத்திற்குள் எழுதி இருக்கிறேன். தவறுகள் அல்லது திருத்தங்கள் இருந்தால் தயவு செய்து சுட்டி காட்டவும் நீங்கள், என் பதிவுக்கு வாக்களிக்கா விட்டாலும் பரவாயில்லை சற்றேனும் என் பதிவின் மூலம் உங்களுக்கு பிரயோசனம் கிடைத்தால் அதுவொன்றே போதும்.



Wishing you Ramadan Kareem
                                                                                                         Ur's Friend
                                                                                                          Rifaj Aslam

Friday, August 6, 2010

Download high quality Al Quraan Recitations

Bookmark and Share

Download high quality Al Quraan Recitations


Dear Friends I'd like share with you all, a resourceful website, I found this website  when I was searching Salah Al Budiar's Quran recitation, Salah Al Budair is the present Imam of Masjid Al Nabavi, Madeena. His qiraath pleases our mind and soul while we listen to it


http://www.quranicaudio.com/ here we can find many qaaries' recitations with their respective accents.


http://www.quranicaudio.com/ is your source for high quality recitations of the Quran. All the Quran recitations on this site are in high quality and free for download and streaming as mp3 format.


In this all in one website the whole Quran can downloaded in mp3 format, Please enjoy your stay and download the recitations and listen to it in this holy month of Ramadan


Click this website and select the name of Qaari, then  you will be directed to the  below page


http://www.quranicaudio.com/




Please click  favorite  Qaari's name in the list, for an example click on  Salah Al Budair than you will be directed to an Option Manu to download  respective Soorah of Al Quran 



"خيركم من تعلم القرآن وعلمه "

The best amongst you are those who learn the Quran and teach it ( Saheeh Bukhari )

Dear friends let your friends and students know about this website and .....................
kindly introduce amongst them ............
we all will get Ajr form Almighty Allah.......................


அல்குரானை முழுமையாகவோ அல்லது தேவையான குறித்த சில சூராக்களையோ Mp3 வடிவில்  இந்த  http://www.quranicaudio.com/ தளத்திற்கு சென்று தரவிறக்கி கொள்ளலாம்,அல்குரானை  மிக இனிமையாக அவர்களுக்கே உரிய ராகத்துடன்  ஓதுவதில்  புலமை பெற்ற நமக்கு பிடித்தமான காரிகளின் கிராத்களை தெரிவு செய்து தரவிறக்கி கொள்ள முடியுமாக இருப்பது இத்தளத்தின் சிறப்பம்சமாகும் . 

"அல்குரானை தானும் கற்று பிறருக்கும் கற்பிக்கின்றவர் உங்களில் மிகச்சிறந்தவர் ஆவார்"
 (நபி மொழி )



wishing you " Ramadan Kareem "
                                                                                  Yours friend,
                                                                                  Rifaj Aslam.